Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

21/05/2017

அகதிகள் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வை முன்வைத்த இஸ்லாம்

இன்று உலகில் யுத்தங்களுக்கு முதலீடு செய்த ஐரோப்பா, அமெரிக்கா உற்பட பல நாடுகளை பெரிதும் பாதித்துள்ள ஒரு பிரச்சினையே அகதிகள் பிரச்சினை. இதற்கு தீர்வை முன்வைக்க தெரியாமல் பல நாடுகள் தடுமாறிய வண்ணமே உள்ளது.

இன்றோ உலகில் யுத்தம், வறுமை, வேலையின்மை போன்ற காரணங்களுக்காக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இடம்பெயர்ந்து செல்வோரை அகதிகள் என குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு செல்வோரை சில நாடுகள் ஏற்றுக்கொள்கின்றது. எனினும் அவர்களுக்கான முறையான தீர்வுகளை எந்தவொரு நாடும் வழங்கவில்லை என்பதே உண்மையாகும். இவ்வாறு ஒரு நாட்டுக்கு அகதிகள் குடிபெயர்ந்தால் அங்கு வேலையில்லாப் பிரச்சினை ஏற்படுவதோடு, அவர்களை அரசு பராமரிப்பதால் மேலதிக செலவும் அந்நாட்டுக்கு ஏற்படுகின்றது. என்றாலும் இப்பிரச்சினைக்கு இஸ்லாம் இலகுவாக தீர்வை முன்வைத்துள்ளது.

இஸ்லாமியர் அகதிகள் பிரச்சினைக்கு முகம் கொடுத்த ஆண்டு ஹிஜ்ரி ௦1 ஆகும். அதாவது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், மக்கத்து முஹாஜிர்கள், தமது மனைவி, மக்கள் உற்பட அனைத்து சொத்துக்களையும் துறந்துவிட்டு மதீனாவை நோக்கி இடம்பெயர்ந்த போது மதீனாவிலும் இப்பிரச்சினைக்கு முகம் கொடுத்தனர். அப்போது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் இரு நாட்டவருக்குமிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.

இதனால் மதீனத்து அன்சாரிகள் தம் சொத்தில் பாதியை மக்கத்து முஹாஜிர்களுக்கு வழங்க முன்வந்தனர். இதனால் மதீனாவுக்கு செலவு அதிகரிக்கும். இது மதீனத்து பொருளாதாரத்திற்கு வீழ்ச்சியாக அமையும். மேலும் இது மக்கத்து மக்களின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வாக அமைவதில்லை. எனவே அதற்கு அனுமதிக்கவில்லை. இதற்கு  மாற்றமாக சிறந்த தீர்வாக முஷாராக, முழாரபா, முஸாரஆ போன்ற பங்குடமை வியாபார முறைகளை அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக மக்கத்து மக்களின் வீடு, வேலையின்மை போன்ற பிரச்சினைக்கு தீர்வை முன்வைத்ததோடு மதீனத்து பொருளாதார அபிவிருத்திக்கும் வழிகாட்டினார்.

Ibnu Asad