எட்டாம் தரம் கற்கையில்
ஏட்டுக் கல்வியுடன்
அனுபவக் கல்வியை
அதிபரிடம் கற்றிட
அச்சத்துடன் இணைந்தோம்
அறபாவின் விடுதியில்
அறபாவில் இருக்கையில்
அதிபரின்
ஆளுமையை பெற்றிட
அவர் வழிகாட்டலில்
ஆளுமையுள்ள தலைவனாய்
ஆர்வத்துடன் இருந்தோம்
அறபா வகுப்புகளிலும்
அறபா விடுதியிலும்
ஏழாண்டுகள் விடுதியில்
அதிபரின் மேற்பார்வையில்
அடிகளும் பட்டோம்
அதிபரிடம் அணுதினம்
அறியாது செய்த
அறிய குற்றங்களுக்கு
ஆனாலும்
ஆரிடமும் கூறி
அகிலம் அறிய பரப்பவில்லை
அக்குற்றங்களை
அடிப்பதில் கண்டிப்பும்
அரவணைப்பில் கனிவும்
ஆலோசனையில் புத்தாக்கமும்
உள்ள உம் ஆளுமை
எம்மை செதுக்கியது
அகிலத்திலே
இன்று எத்திக்கு சென்றாலும்
அன்று அறபாவில்
அதிபரிடம் பெற்ற
அறிய அனுபவங்கள்
உறு துணையாக இருக்கிறது
அனுதினம்
ஓய்வு பெற்ற பின்னும்
ஒடுங்காமல் இருக்கட்டும்
உம் சேவை
எட்டுத்திக்கும் பரவட்டம்
உம் நாமம்
உளத்தெம்பும்
உடலாரோக்கியமும்
உறுதியாக பெற்று
உயர்வாய் வாழ்ந்திட
உன்னத வாழ்த்துக்கள்
அதிபர் வாரிஸ்
அலி மௌலானா அவர்களே!
இக்கவி சமர்பணம்
என் ஆசான்
அதிபர் வாரிஸ்
அலி மௌலானவுக்கு
இவ் வண்ணம்
உம் மாணவன்
இப்னு அஸாத்