20/01/2024

தடைபட்ட தேர்தல்


சிங்க புத்திரன்

அது உகண்டாவின் தென் கிழக்கு பகுதியில விக்டோரியா ஏரிக்கு அருகில உள்ள ஊராகும். அது ஒரு தீவு அந்த தீவின் பெயர் தம்ப தீவு (Damba Island) அந்த ஊரிலுள்ள பள்ளிவாசலின் பெயர் கல்யாம்புதி பள்ளிவாசல் (Kalyambuzi Mosque).

இந்த ஊரின் பிரபல பள்ளிவாசலை இடி அமீன் வபாத்தாகின கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் நிர்வகிப்பது, இடி அமீனினால் உருவாக்கப்பட்ட உகண்டா முஸ்லிம் உயர் சபை உறுப்பினர்களுக்கு உயர்தரமான கோப்பியை கொடுத்து கைலபோட்டுக் கொண்டு அவர்களின் ஸபோர்ட்ல வாழும் ஊர் மக்களின் அங்கீகாரம் அற்ற சர்வாதிகார நிர்வாக அமைப்பொன்றாகும்.

அந்த பள்ளிவாசலுக்கு 3 வருட காலத்தை உடைய புதிய நிர்வாக சபையொன்றை உருவாக்க வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஊர்மக்களுக்கு ஆசை. இனி அதற்கு கடந்த 6 வருடமாக முயற்சி செய்கிறார்கள். 6 பேரை தெரிவு செய்ய வேண்டும் என்று 12 பேரை களத்தில இறக்குகிறார்கள். இனித்தான் பார்க்க வேண்டும் அந்த ஊர் மக்களின் ஆசை நிறைவேறுமா என்று. ஏனெனில் தேர்தல் வைக்க பார்த்த முதல் ஆண்டு அந்த தீவில் ஒரு தேவாலயத்தில குண்டு வெடிச்சி தடைப்பட்டது.  ஓராண்டு கழிந்து மீண்டும் வைக்க பார்த்தால் கொரோனா என்ற காரணத்தில மூன்று ஆண்டு கழிகின்றது. ஐந்தாம் ஆண்டு வைக்க பார்த்தால் நாட்டில் தேர்தல் வைக்கும் போது பள்ளிவாசல்களில் தேர்தல் வைக்க வேண்டாம் என்று அரசாங்கம் தடை விதிக்கின்றது. இனி ஆறாம் ஆண்டு எதிர்வரும் மூன்றாம் வாரம் தேர்தல் நடப்பதாக பள்ளிவாசலில் அறிவித்தல் செய்கிறார்கள். 

அந்த அறிவித்தல் வந்ததும் வேட்பாளர் இருவர் ஓடொடி வந்து முஸ்தாக் அந்ரிஸியிடம் கடிதம் எழுதி கேட்கிறார்கள். ஒருவர் தன் தொழிலால் இந்த பணியை சரியாக செய்ய முடியாமல் போகும் என்று வாபஸ் கடிதம் கேட்கிறார். மற்றவர் தன்னால் தவறுகள் நடக்கலாம் என இறை அச்சத்தில் வாபஸ் கடிதம் கேட்கிறார். கேட்டதும் எழுதிக் கொடுக்கிறார் பின் விளைவு பற்றி அறியாமல் பள்ளிவாசல் நிர்வாக சபையை மாற்றனும் என முனைப்பாக இருந்த முஸ்தாக் அந்ரிஸி. 

இறுதியாக தேர்தல் நடக்க மூன்று நாள் இருக்கையில் கல்யாம்புதி பள்ளிவாசலில் இருந்து பகிரங்க அறிவித்தல். குறித்த தேர்தலில் வேட்பாளாராக களமிறங்கிய இருவர் வேட்பாளாரிலிருந்து வாபஸ் பெற்று விட்டனர். உகண்டா தேர்தல் சட்டப்படி தேர்தலுக்கு வேட்பாளாராக களமிறங்கிய ஒருவர் வாபஸ் பெறும் பட்சத்தில் குறித்த தேர்தலும் வேட்பாளார் பட்டியலும் ரத்தாகிவிடுகிறது. எனவே மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு விண்ணப்பம் கோரப்படும் அதுவரை இப்பள்ளிவாசலுக்கான தேர்தல் நடைபெறாது.

01/01/2024

வட் வரி



வட் உயர விலை உயரம்
விலை உயர விற்பனை குறையும்
விற்பனை குறைய வருமானம் குறையும்
வருமானம் குறைய வரி குறையும்

09/12/2023

ஏழாண்டுகள் அதிபருடன்




எட்டாம் தரம் கற்கையில்
ஏட்டுக் கல்வியுடன்
அனுபவக் கல்வியை
அதிபரிடம் கற்றிட
அச்சத்துடன் இணைந்தோம்
அறபாவின் விடுதியில்

அறபாவில் இருக்கையில்
அதிபரின்
ஆளுமையை பெற்றிட
அவர் வழிகாட்டலில்
ஆளுமையுள்ள தலைவனாய்
ஆர்வத்துடன் இருந்தோம்
அறபா வகுப்புகளிலும்
அறபா விடுதியிலும்

ஏழாண்டுகள் விடுதியில்
அதிபரின் மேற்பார்வையில்
அடிகளும் பட்டோம்
அதிபரிடம் அணுதினம்
அறியாது செய்த
அறிய குற்றங்களுக்கு
ஆனாலும்
ஆரிடமும் கூறி
அகிலம் அறிய பரப்பவில்லை
அக்குற்றங்களை

அடிப்பதில் கண்டிப்பும்
அரவணைப்பில் கனிவும்
ஆலோசனையில் புத்தாக்கமும்
உள்ள உம் ஆளுமை
எம்மை செதுக்கியது
அகிலத்திலே

இன்று எத்திக்கு சென்றாலும்
அன்று அறபாவில்
அதிபரிடம் பெற்ற
அறிய அனுபவங்கள்
உறு துணையாக இருக்கிறது
அனுதினம்

ஓய்வு பெற்ற பின்னும்
ஒடுங்காமல் இருக்கட்டும்
உம் சேவை
எட்டுத்திக்கும் பரவட்டம்
உம் நாமம்

உளத்தெம்பும்
உடலாரோக்கியமும்
உறுதியாக பெற்று
உயர்வாய் வாழ்ந்திட
உன்னத வாழ்த்துக்கள்
அதிபர் வாரிஸ்
அலி மௌலானா அவர்களே!

இக்கவி சமர்பணம்
என் ஆசான்
அதிபர் வாரிஸ்
அலி மௌலானவுக்கு
இவ் வண்ணம்
உம் மாணவன்
இப்னு அஸாத்

21/05/2017

அகதிகள் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வை முன்வைத்த இஸ்லாம்

இன்று உலகில் யுத்தங்களுக்கு முதலீடு செய்த ஐரோப்பா, அமெரிக்கா உற்பட பல நாடுகளை பெரிதும் பாதித்துள்ள ஒரு பிரச்சினையே அகதிகள் பிரச்சினை. இதற்கு தீர்வை முன்வைக்க தெரியாமல் பல நாடுகள் தடுமாறிய வண்ணமே உள்ளது.

இன்றோ உலகில் யுத்தம், வறுமை, வேலையின்மை போன்ற காரணங்களுக்காக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இடம்பெயர்ந்து செல்வோரை அகதிகள் என குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு செல்வோரை சில நாடுகள் ஏற்றுக்கொள்கின்றது. எனினும் அவர்களுக்கான முறையான தீர்வுகளை எந்தவொரு நாடும் வழங்கவில்லை என்பதே உண்மையாகும். இவ்வாறு ஒரு நாட்டுக்கு அகதிகள் குடிபெயர்ந்தால் அங்கு வேலையில்லாப் பிரச்சினை ஏற்படுவதோடு, அவர்களை அரசு பராமரிப்பதால் மேலதிக செலவும் அந்நாட்டுக்கு ஏற்படுகின்றது. என்றாலும் இப்பிரச்சினைக்கு இஸ்லாம் இலகுவாக தீர்வை முன்வைத்துள்ளது.

இஸ்லாமியர் அகதிகள் பிரச்சினைக்கு முகம் கொடுத்த ஆண்டு ஹிஜ்ரி ௦1 ஆகும். அதாவது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், மக்கத்து முஹாஜிர்கள், தமது மனைவி, மக்கள் உற்பட அனைத்து சொத்துக்களையும் துறந்துவிட்டு மதீனாவை நோக்கி இடம்பெயர்ந்த போது மதீனாவிலும் இப்பிரச்சினைக்கு முகம் கொடுத்தனர். அப்போது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் இரு நாட்டவருக்குமிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.

இதனால் மதீனத்து அன்சாரிகள் தம் சொத்தில் பாதியை மக்கத்து முஹாஜிர்களுக்கு வழங்க முன்வந்தனர். இதனால் மதீனாவுக்கு செலவு அதிகரிக்கும். இது மதீனத்து பொருளாதாரத்திற்கு வீழ்ச்சியாக அமையும். மேலும் இது மக்கத்து மக்களின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வாக அமைவதில்லை. எனவே அதற்கு அனுமதிக்கவில்லை. இதற்கு  மாற்றமாக சிறந்த தீர்வாக முஷாராக, முழாரபா, முஸாரஆ போன்ற பங்குடமை வியாபார முறைகளை அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக மக்கத்து மக்களின் வீடு, வேலையின்மை போன்ற பிரச்சினைக்கு தீர்வை முன்வைத்ததோடு மதீனத்து பொருளாதார அபிவிருத்திக்கும் வழிகாட்டினார்.

Ibnu Asad